நாட்டில் சீரற்ற வானிலை,மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு 35 கப்பல்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 200 பேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

0
12

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவுகள், 35 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளன.

இந்தக் குழுவில் 35 கப்பல்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 200 பேர் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயத்துக்கு முன்னாயத்தமாக, மேற்கு கடற்படை கட்டளை பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று அனர்த்த நிவாரண குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது.

அதேவேளை, உடனடி நிவாரணத்திற்காக 24 மேலதிக நிவாரண குழுக்கள் மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவில் நிறுத்தப்பட்டுள்ளன.

உடுகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடலமட்ட பிரதேசத்திலும் தென் கடற்படைக் கட்டளைப் பிரிவின் நிவாரணக் குழுவொன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, தேவையான போது நிவாரண குழுக்களை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை எப்போதும் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here