நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

0
46

தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் வயப்பட்டுள்ளார்.

சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட நயன்தாராவிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here