நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ளார்.

0
41

புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என    அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டிசெம்பர் முதலாம் திகதியன்று  பெசில் ராஜபக்‌ஷ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here