நிதி அமைச்சு மதுபான உற்பத்திசாலைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றது.

0
13

நாட்டு மக்கள் இன்று உணவு உட்கொள்ள முடியாத நிலையில இருக்கின்றனர், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது இவ்வாறான பின்னணியில் நிதி அமைச்சு மதுபான உற்பத்திசாலைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றது என ராமன்ய நிக்காயவின் தென்னிலங்கைப் பிரிவு தலைவர் ஒமல்பே சோபித தேரர் ( OMALPE SOBHITHA THERO) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் சமூக சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய குடிகார காலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கிலா அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் புதிதாக மூன்று மதுபான உற்பத்திசாலைகளுக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது அவற்றை மூடி மறைக்கும் நோக்கிலா புதிய மதுபான உற்பத்திசாலைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அனுமதி பத்திரம் வழங்குவதன் பின்னணியில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன ? மெய்யான மக்கள் பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் உத்தியா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here