நீரோடையில் விழுந்து 12 வயது சிறுவன் மரணமடைந்துள்ளான்.

0
23

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பொத்தனை நீரோடையில் விழுந்து 12 வயது சிறுவன் ஒருவன், நேற்று (24)  மரணமடைந்துள்ளான் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்னர்.

உயிரிழந்த சிறுவன் வாழைச்சேனை, பாலைநகர் ரகுமானியா வீதியைச் சேர்ந்த றிபாஸ் முகம்மட் ஆசிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரோடையில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் சடலம் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here