நேற்றும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் .

0
19

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இவர்களுள் 30 ஆண்களும் மற்றும் 15 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,149 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 236,659 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here