நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
17

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை14,305 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 562,000 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 529,662 ஆக அதிகரித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here