முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சராக நியமிக்கப்படுவாரா? இல்லையா? என்பது தொடர்பாக இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்விவகாரமாகும்.
எனினும் இதுதொடர்பாக இன்னும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்