பயணத்தடையினை மீறி வீதியால் பயணம் செய்யும் நபர்களுக்கு பி சிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

0
43

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில்,பயணத்தடையினை மீறி வீதியால் பயணம் செய்யும் நபர்களுக்கும்,கொரோனா தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும்,பி சிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று(15)இடம்பெற்றது.

மேலும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை எழுபத்தினான்கு (74) பேருக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (15.06.2021) வெளியானதில், இருபத்தி இரண்டு (22) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில்,49 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் 50 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேலெழுவாரியாக நடைபெற்றது.இதில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (15) இடம்பெற்ற பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here