பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில், கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, நிதி அமைச்சர் பசிலுக்கு, பதாகைகளை வைத்து மகிழ்ச்சி ஆரவாரம்.

0
31

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல பகுதிகளிலும் இருந்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில், கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, நிதி அமைச்சர் பசிலுக்கு, பதாகைகளை வைத்துள்ளனர்.

பொதுஜனப் பெரமுன கட்சியின கொடிகள் தொங்க விடப்பட்டு, பட்டாசி கொழுத்தி, ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here