பஸில் ராஜபக்ச கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு வர வரவேண்டும்- ச.வியாழேந்திரன்

0
111

பஸில் ராஜபக்சவின் சேவை எமது நாட்டுக்கு தேவை என இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் பஷில் ராஜபக்ஷ அவர்கள். ஜனாதிபதியினுடைய முக்கிய இரண்டு செயல் அணியில் பொறுப்பாளராக இருந்து நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்றார்.

ஆகவே அவர் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டியவர். அதே நேரத்தில் பொருளாதார ரீதியான பொருளாதார அமைச்சை பாரமெடுத்து இந்த நாட்டுக்கு தனது சேவையை வழங்க வேண்டும் . எங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here