பாசிக்குடா கடற்கரைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
67

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாகவே பாசிக்குடா கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக பாசிக்குடா சுற்றுலா பொலிஸ் காவலரன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கடற்கரைப் பகுதிக்குள் எவரும் செல்லாத வகையில் தடைபோட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, பாசிக்குடா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here