பாடசாலைகளை திறப்பதற்காக முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

0
26

கொரோனா தொற்றால்   மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கு சுகாதார பரிந்துரைகளின் கீழும் மற்றும் கல்வியை அனைவருக்கும் வழங்கும் நோக்கிலும் முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை முழுமையான சுகாதார பரிந்துரைகளின் கீழ் இந்த மாதத்துக்குள் திறப்பதற்கு உரிய திட்டங்களை முன்னெடுக்க  எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர் பாடசாலைகளை  திறப்பதற்காக முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.   50 மாணவர்களுக்கு குறைந்த 1,439 பாடசாலைகள் மற்றும் 51-100 மாணவர்களைக் கொண்ட 1,523 பாடசாலைகள் என மொத்தமாக 2,962 பாடசாலைகளை முதற்கட்டமாக இந்த மாதத்துக்குள் திறக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய சகல பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக பெற்றோரிடத்தில் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here