பாடசாலைகள் மீளத் திறக்கும்போது ஆசிரியர்கள் பாடசாலைக்குத் திரும்புவர்.

0
10

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களுக்கிடையே கலந்துரையாடல் ஒன்றை இன்று (11)  நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஒவ்வொரு தொழிற் சங்கத்தின் ஒவ்வொரு பிரதிநிதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

இக்கலந்துரையாடலானது சாதகமான முடிவுகளைத் தரும் என எதிர்பார்ப்பதாக பெரேரா மேலும் கூறியுள்ளார். 

அதனைத் தவிர, பாடசாலைகள் மீளத் திறக்கும்போது ஆசிரியர்கள் பாடசாலைக்குத் திரும்புவர் என ஆழமான நம்பிக்கை ஒன்று காணப்படுவதாகவும் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், பிரதமர் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது ஆசிரியர், அதிபர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று வழங்கப்படுமெனத் தான் எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அடுத்தாண்டு பட்ஜெட் மூலம் தீர்வொன்று முன்வைக்கப்படுமென்ற அரசாங்கத்தின் கூற்றுக்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளதாக ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here