பாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த தாய் கைது .

0
37

பிறந்து 16 நாட்களான தனது குழந்தைக்கு தாய்பாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் வசிக்கும் 21 வயதான தாய்க்கு அண்மையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பிரசவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்ததாக வைத்தியசாலையில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தாய் தினமும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்த நிலையில் திடீரென நஞ்சுகலந்த பாலை குழந்தைக்கு கொடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், வருகின்ற 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here