பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பிணை வழங்க கோரிக்கை.

0
12

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு எதிரான வழக்கு விடயத்தில் முடிவெடுக்காமல், தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றில் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் விசாரணை இன்று இடம்பெற்றபோது, வழக்கில், மத்திய அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் துஷார் மேத்தா மனு விசாரணையை மற்றும் ஒரு திகதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார்.

இதன்போது கருத்து தெரிவித்த நீதியரசா்கள், நீண்ட நாட்களாக பேரறிவாளன் விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் பேரறிவாளன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மீது முடிவெடுக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டனர்.

எனவே மாநில அரசாங்கத்தின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். அதேநேரம் மீண்டும் இந்த மனுவின் விசாரணையை ஒத்திவைக்க கோரக்கூடாது என்றும் நீதியரசர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தாமதிக்கப்பட்டு வருவதால், இறுதி முடிவு வரும் வரை பேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும் என அவரது சட்டத்தரணி கோரினார்.

இதனை பரிசீலிப்பதாக கூறிய நீதியரசர்கள், மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here