பிரதேச செயலகத்துக்குரிய காணி, நிதி அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்- சிவஞானம் சிறீதரன்

0
132

“கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு காணி, நிதி அதிகாரத்தை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல.  விரைவில் காணி, நிதி அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நேற்று முன்தினம் (16) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தவராசா கலையரசன் ஆகியோர் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் ஆகியோர் செயலக விடயம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவிக்கும் போதே, சிறீதரன் எம்.பி இந்த விடயத்தைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தப் பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 வருடங்களைத் தாண்டியும் பிரதேச செயலகத்தினுடைய நடவடிக்கைகள் நடைபெறுகின்ற போதும் ஒரு கணக்காளரை நியமிக்காமல், நியமித்தும் அதனை நிறுத்தியும் நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொண்டிருப்பது ஒரு நல்ல செயலல்ல.

“அதேபோல் தன்னுடைய பிரதேச செயலக எல்லைக்குள் காணி அதிகாரமானதும் அப்பிரதேச செயலகத்துக்கு வழங்கப்படாமல் இருக்கின்றதே தவிர, மற்றைய அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

“நாங்கள் தொடர்ந்து இந்தப் பிரதேச செயலகத்துக்குரிய காணி, நிதி அதிகாரங்களை மிக விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here