மினுவாங்கொடை – பீல்லவத்த பகுதியில் பிறந்து 18 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனா தொற்றுநோயால் இறந்துள்ளதாக மினுவாங்கொட சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
குறித்த குழந்தை நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
இதையடுத்து குழந்தைக்கு நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இறந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் நேற்று முதல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.