புத்தளத்தில் திருமண வீடொன்று சுற்றிவளைப்பு.

0
31

புத்தளத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்ட திருமணம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

முல்லிபுரம், வெட்டால பிரதேசத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதி உட்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், புதுமண தம்பதி உட்பட கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக புத்தளம் சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மணமகன் வெளிநாட்டில் இருந்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்தவராகும். அவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த திருமண நிகழ்வில் 200க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டிருந்ததாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பரிசோதகர்கள் திருமண நிகழ்விற்கு வருவதாக தகவல் கிடைத்தவுடன் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here