பெசில் ராஜபக்ஷவின் பதவியேற்பானது வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

0
26

பெசில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை, அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவருக்கு  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும்  பெசில் ராஜபக்ஷ பதவியேற்றமை தொடர்பாக,  அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பெசில் ராஜபக்ஷவின் ஆளுமை என்பது  நமது மக்களினால் நன்கு அறியப்பட்ட ஒன்றாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும்  பதவியேற்றுள்ளமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலிலும்  பயணித்துக் கொண்டிருக்கும்  எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது என்றும், டக்ளஸ் கூறியுள்ளார்.

“அதேபோன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பான நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

“மேலும், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத்திட்டங்களும், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புகளும் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நிலையான இடத்தினை பிடித்திருக்கின்றமையினால், அவரின் தற்போதைய பதவியேற்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here