பெண்களை சிறுமிகள்,பாலியலுக்காக விற்பனை செய்யும் இணையங்கள் கண்காணிக்கப்படுகின்றனவா? அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

0
23

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா என, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு ஊடாக விசேட ஆய்வறிக்கை ஒன்றைப் பெற்று அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம உத்தரவிட்டார்.

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டமை தெரிய வந்துள்ள நிலையில் நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் பின்ணனியிலேயே, நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

பென்களையும் சிறுமிகளையும் இணையத் தளங்களில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் அவ்வாறான இணையத் தலங்கள் தொடர்பில் மேற்பார்வைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்தும் வெளிப்படுத்திக் கொள்ளவே நீதிவான் இவ்வறிக்கை கோரலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here