பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிற்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

0
10

தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில்  ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்க ஏதுவாக  சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறு பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிற்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here