பேஸ்புக் ஊடாக பொய்யான தகவலை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை.

0
132

ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் சமூக வலைத்தளத்தின் ஊடாக  பொய்யான தகவலை பதிவிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க காலி நீவதான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காலி அக்மீமன- தொடகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரொருவரே இவ்வாறு தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடலில் மூழ்கிய எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் வேண்டுமென்றே இலங்கை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் பதிவொன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேக நபர் கைசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here