பொங்கல் தினத்தில் கொரோனா தொற்று உறுதியான 677 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0
7

கொரோனா தொற்று உறுதியான மேலும் 677 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 594,996 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11,935 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 171 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,871 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here