பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில், மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான முகாம், நேற்று (28) காலை நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்த இரத்ததான முகாமை, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பெருமளவான இளைஞர்கள் இரத்த தானம் வழங்கினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, “இரத்தப் பற்றாக்குறை, மட்டக்களப்பு மாவட்டம் அன்றி முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.
“கடந்த சில தினங்களாக இலங்கையில் பி.சி.ஆர் எடுக்கும் வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளபோதிலும் தொற்றாளர்களின் தொகையும் இறப்பும் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வா.கிருஸ்ணா