பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

0
8

பிரியந்த குமார தியவதனவை கும்பல் கொடூரமாகக் கொன்றது மிகவும் பொதுவான விஷயம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் தெரிவித்தமைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath-Weerasekara) கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

ஊடகங்களில் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தினை பார்த்ததாகவும் அந்த கூற்று நிராகரிப்பு தன்மையை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியந்த குமாரவின் படுகொலையை கண்டித்துள்ள அமைச்சர் இந்த படுகொலை குறித்து பாகிஸ்தான் பிரதமர் கண்டனமும் வெட்கமும் வெளியிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தமை மாத்திரமே ஆறுதலான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்இடம்பெறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் ஊடகமான DAWN இந்த கொடூர கொலை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டித்து ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here