பொது போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கபட உள்ளது.

0
21

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை விரைவில்  ஆரம்பிக்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு வரையறுக்கப்பட்ட ரீதியில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனை  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (12) தெரிவித்துள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் இந்த பொது போக்குவரத்து சலுகை வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய தேவை என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை குறித்த நபர்கள் வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த அத்தியாவசிய போக்குவரத்து சேவைக்கான சில பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here