பொது மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்- பசில் ராஜபக்ஷ

0
23

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லங்கல ரஜமஹா விகாரைக்கு நேற்று மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலுலம் பொது மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.  அத்துடன் நாட்டின் கொருளாதார நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here