பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவானதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினால் சர்வதேச ரீதியில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தான் வரி குறைக்கப்பட்ட போதிலும் விலை அதிகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர் என்பதை தாம் புரிந்துகொள்வதாகத் தெரிவித்த அமரவீர, தற்போது மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பை விட இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பில் அரசதலைவர் மற்றும் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே சிறந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரப் பிரச்சினை மற்றும் காலநிலை நிலைமை காரணமாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.