பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற்றமடைய அடைய சீனாவின் உதவி கட்டாயம் தேவை- அங்கஜன் இராமநாதன்

0
28

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சீனா போன்ற வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்று கடலட்டை பண்ணை அமைத்து கடலட்டை பிடித்து வருகின்றமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அங்கஜன் இராமநாதனிடம் வினவிய போது இதனைக் கூறியுள்ளார்.

கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனம் அனுமதியின்றி கடலட்டை பண்ணை அமைத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here