பொலநறுவையில் 18 வயது குடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை .

0
32

பொலநறுவை மாவட்டத்தில் அரலகன்வில யாய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடிடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  

18 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரலகன்வில யாய பிரதேசத்தை சேர்ந்த சதுபமா கௌஷல்யா பத்திரன என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த பெண்  சாதாரண தர பரீட்சையில் உயர் சித்தி பெற்று பொலநறுவையிலுள்ள பிரபலமான பாடசாலையில் உயர்தரம் கற்று வந்துள்ளார். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

தனது கணவர் மணல் எடுப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குடும்ப பிரச்சினையே இந்த தற்கொலைக்கு பிரதான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துக் கொள்வதாக இந்த பெண் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here