பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை.

0
17

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (01) பதிவாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கியினை எடுத்து தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்ட இவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here