போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி, ஆர்ப்பாட்டம்.

0
26

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி, பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதியில் இறங்கி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடைபவணியாக வாழைச்சேனை பிரதான வீதியூடாக, வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலரின் நடவடிக்கையால் முழுப் பிரதேசத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதாகவும், போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதனைப் பாவிப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, போதைப்பொருள் இப்பிரதேசத்தில் இருந்து இல்லாமல் செய்யுமாறு கோரி, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜரையும் அவர்கள் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here