போலி ஆவணங்களை பயன்படுத்தி கொழும்புக்கு வருவதற்கு முயற்சித்த பஸ்சாரதி மற்றும் நடத்துனர் கைது .

0
104

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு முயற்சித்த பஸ் பொலிஸாரால் இனங்காணப்பட்டதுடன் அதன் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்றை மதவாச்சி பகுதியில் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பஸ் சாரதி மற்றும் நடத்துனர் போலி ஆணவனங்களை காண்பித்து இவ்வாறு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதே வேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மேல்மாகாணத்தை கடக்க முற்பட்ட 174 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here