போலி பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

0
10

போலி பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொச்சிக்கடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து வெளிநாடு செல்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 37 வயதுடைய கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தொலுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பரிசோதனையின் போது 17 போலி பி.சி.ஆர் அறிக்கைகள், ஒரு கணினி, 5  கைத்தொலைபேசிகள் மற்றும் சேமிப்பகம் போன்றவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here