மகனின் சடலத்தை கண்ட தாய் மாரடைப்பால் மரணம் .

0
35
Coronavirus19. COVID-19. Coronavirus19 Dead Body, with an identification tag - blank sign attached to a toe. Covered with a white sheet. Dead Human due to COVID-19 Infection. Dead Person Coronavirus19

உயிரிழந்திருந்த தனது மகனின் சடலத்தைக் கண்ட தாயார், சில மணி நேரத்திலேயே மாரடைப்பால் மரணித்த சம்பவம், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மகன், புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, ஜயங்கேணியில் தனிமையில் வாழ்ந்து வரும் அவரது தாயார் வீட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், நேற்றுக் காலை 11 மணியளவில் மகனைக் காணவில்லை என தாயார் தேடிய போது, அறைக்கதவு பூட்டப்பட்டுள்ளதையடுத்து, உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு தனது உயிரை மாய்த்த நிலையில் மகன் சடலமாக் கி்டப்பதைத் தாயார் கண்டுள்ளனார். ஏற்கெனவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தாயருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here