மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் திகதி NVQ 3,4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

0
42

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் திகதி NVQ 3,4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேற்படி தொழில் நுட்பக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம் கற்று சித்தியடையாத மாணவர்களும், க.பொ.த உயர்தரம் கற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

விவசாய கள உதவியாளர், நீர்க்குளாய் பொருத்துனர், அலுமினிய வடிவமைப்பு, மோட்டார் சைக்கள் மற்றும் ஸ்கூட்டர் பழுதுபார்த்தல் ஆகிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இக்கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாய் நிபுணதா சிசு சவிய புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளதோடு,  மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன் டிக்கட் வசதி, சுயதொழில் தொடங்குவதற்கு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

மேலும்,  இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மாணவர்கள் தொடர்ச்சியாக NVQ மட்டம் 5 கற்கை நெறிகளை கற்க முடியும்.  விண்ணப்ப படிவங்களை தொழில்நுட்ப கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here