மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத  சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0
20

கடந்த சில தினங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த  மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத  சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பிரதம அதிபர்  ஏ.பேரின்பராசா தெரிவித்தார்.

தினமும் இரவு 8.15மணிக்கு  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் பாடும்மீன் கடுகதி  புகையிரத சேவை, புணாணைக்கும் வெலிகந்தைக்குமிடையில் புகையிரத பாதையில் பாலம்  திருத்தப்பணிகள் காரணமாக இரவு 10.20மணிக்கு பொலநறுவையிலிருந்து  சேவையிலீடுபட்டு வந்தது.

தற்போது திருத்தப் பணிகள் நிறைவு  பெற்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி சேவைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய ஞாயிறு   8.15 மணிக்கு பாடும்மீன் புகையிரதம் கொழும்பு நோக்கி புறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here