மட்டக்களப்பில் இடம்பெறற்ற மாவட்ட உர ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டம்!!

0
84

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட உர ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீஸ், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எஸ்.எம்.சிறாஜுன், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட மேலும் பல திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது விவசாய அமைச்சின் புதிய சுற்று நிருபத்திற்கு அமைவாக முன்னைய மாவட்ட உர ஒருங்கிணைப்புக்குழு இரத்துச் செய்யப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 22 உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய புதிய உர ஒருங்கிணைப்புக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டாளராக தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எஸ்.எம்.சிறாஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் சேதனைப்பசளை தயாரிப்பை ஊக்குவிப்பது தொடர்பாகவும், சேதனைப்பசளை தயாரப்புக்களின் தர நிர்ணயம் தொடர்பாகவும், சேதனைப்பசளையினை தயாரிக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சேதனைப்பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக அதிகாரிகள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here