மட்டக்களப்பில் இயற்கையின் மொழி (SOUND OF NATURE) அமைப்பினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு .

0
1454

மட்டக்களப்பில் இயற்கையின் மொழி (SOUND OF NATURE) அமைப்பின் ஊடாக இருதயபுரம் மேற்கு கிராமத்தில் பாடசாலை செல்லும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மாணவர்களுக்கு இயற்கையின் மொழி அமைப்பின் நிறுவனர் திருமதி காயத்ரி உதயகுமார் அவர்களின் தலைமையின் கீழ் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று (2021.07.04) கோவிட் நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
லண்டனில் வசிக்கும் டொக்டர் காந்தா நிரஞ்சன் அவர்கள் கோவிட் நிவாரண விநியோகத்துக்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அனிதா ஸ்ரீ ,ஆதிரன் ஆகிய இருவரும் அன்பளிப்பை வழங்கினர்.
அத்தோடு HELP EVER FOUNDATION உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here