மட்டக்களப்பில் இராணுவ வாகனமொன்று விபத்துக்குள்ளானது.

0
92

மட்டக்களப்பு, செங்கலடி- கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனமொன்று  வீதியை விட்டுவிலகி பாலத்துக்கு கீழே குப்புற விழுந்து, இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் இராணுவத்தினர் இருவர் மரணமடைந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்  எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிசார், ஒருவரின் சடலத்​தை தே​டி வருவதாகவும் தெரிவித்தனர்.

 செங்கலடியை நோக்கி பயணித்து கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நீரோடைக்குள்ளிருந்து  ​டிரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனத்தை  கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here