மட்டக்களப்பில் எரிபொருளுக்காக வீதியோரத்தில் வரிசையாக காத்திருந்தவர்கள் மீது  தனியார் பஸ் மோதியதில்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

0
38

-கொழும்பு வீதியிலுள்ள ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக  எரிபொருளுக்காக வீதியோரத்தில்  வரிசையாக காத்திருந்தவர்கள் மீது  தனியார் பஸ் மோதியதில்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், ஐந்து மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று (27) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து  ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி மோதியுள்ளது.

படுகாயமடைந்த ஐவரும், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பஸ்ஸின் சாரதி  அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பஸ்ஸை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here