மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.

0
26

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தெரிவு செய்யப்பட கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ” கிரேஸ் லைப் லைன் ” தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இந்த அத்தியாவசிய போசாக்கு உலர்வுணவு பொதிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான கே.கிரிசுதன், இ.உதயகுமார் “கிரேஸ் லைப் லைன் ” தொண்டு நிறுவன பிரதிநிதிகள், குடும்பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here