மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்.

0
26

மட்டக்களப்பு மாவட்டம், பெரியகல்லாறு – இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையால், எதிர்வரும் 21 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றபோது, சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here