மட்டக்களப்பில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயது இளைஞர் கைது.

0
27

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம்.நிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை அவர்களது பொற்றோருக்கு தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை (11) சிறுமியின் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே சந்தேக நபரை 27 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here