மட்டக்களப்பு ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

0
120

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி, நாகராசா கரிசனன் என்ற 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (17) மாலை 2.30 மணியளவில் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, காற்றின் வேகம் காரணமாக தோணி ஆற்றின் நடுப்பகுதிக்குச் செல்ல முற்பட்டுள்ளது.

இதனால் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த சிறுவன் ஆற்றில் பாய்ந்துள்ளார்.

இவ்வாறு ஆற்றில் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற அயலவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்த போதும், இறுதியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுவனின் சடலத்தையே ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here