மட்டக்களப்பு கல்லடி வேலூர்,கல்லடி புது முகத்துவாரம், நாவற்குடா கிழக்கு ஆகிய பகுதி மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

0
342

மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம், திருச்செந்தூர் விபுலானந்தா வித்தியாலயம், நாவற்குடா கிழக்கு சாரதா வித்தியாலயம் ஆகிய இடங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மேற்படி கொரோனா தடுப்பூசியானது ஏற்றப்பட்டது.

குறித்த தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் பூரண ஆதரவுடன் ஏறாளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசியினை பெற்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here