மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.

0
22

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.

புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நோயாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று, கெப் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நேற்று காலை 6 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், கெப் வாகனத்தில் பயணித்த இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்திற்குள்ளான கெப் வாகனத்தில் பயணித்தவர்கள், பொலன்னறுவை வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் கூறினர்.

இதன்போது, பஸ்ஸில் 10 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

விபத்தின் பின்னர் நோயாளர்கள் வேறொரு பஸ்ஸில் ஏற்றப்பட்ட புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here