மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு.2021.07.15

0
211

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் வாவிக்கரையோரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்காக, தென் இந்திய இந்து கோவில்களுக்கு நிகராக இந்த ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.
சைவத்தொண்டர் திரு கி. மகேஸ்வரன் அவர்களின் கடுமையான உழைப்பினாலும் ,முயற்சியினாலும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது .
இன்று வியாழக்கிழமை பக்த அடியார்கள் சுகாதார நடை முறைகளை கடைபிடித்து எண்ணெய்க்காப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை சுப வேளையில் நடை பெற உள்ளது. சைவ அடியார்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பித்து ஆஞ்சநேயரின் அருள் கடாச்சத்தை பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

admin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here