மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பிரபல விடுதி உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0
26

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள பிரபல விடுதி உரிமையாளர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட விடுதி உரிமையாளரின் மரணம் தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பொலிஸ்
குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here